மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

இனி எளிதாக வாங்க முடியாது!

இனி எளிதாக வாங்க முடியாது!

வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களுக்கான விலை இந்தக் கோடைக் காலத்தில் 10 சதவிகிதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் தங்களது வீடுகளுக்குத் தேவையான மின்சாதனப் பொருட்களை வாங்குவதற்கு பட்ஜெட் போட்டு வைத்திருந்தால் அவர்கள் இனி அதிக செலவு செய்தே அப்பொருட்களை வாங்க வேண்டியிருக்கும். டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையை 10 சதவிகிதம் வரையில் உயர்த்துவதாக அறிவித்துள்ளன. முன்பு ரூ.12,000 விலையில் விற்கப்பட்ட தொலைக்காட்சி ஒன்றின் விலை 1,200 ரூபாயும், ரூ.15,000க்கு விற்கப்பட்ட தொலைக்காட்சியின் விலை 1,500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

உற்பத்திச் செலவுகள் உயர்ந்த காரணத்தாலேயே பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சாதன உற்பத்தியாளர்கள் காரணம் தெரிவித்துள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு மின்சாதன உற்பத்திக்கான மூலதனப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு மின்சாதனப் பொருட்களுக்கான விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆடம்பரப் பொருட்களுக்கான வரி மின்சாதனப் பொருட்களுக்கு அதிரடியாக 18 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதனால் இப்பொருட்களுக்கான விலையும் உயர்ந்துள்ளது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon