மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

நெட்வொர்க் தகவல் திருட்டு இனி இல்லை!

நெட்வொர்க் தகவல் திருட்டு இனி இல்லை!

மொபைல் நெட்வொர்க்குகளின் செயல்பாடுகளைச் செயலிகள் மூலம் கண்காணிப்பதைத் தடுக்கும் வசதி ஆண்ட்ராய்டின் புதிய வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டில் ஜெல்லி பீன், கிட் கேட், லாலிபாப், மார்ஸ்மல்லோ, நக்கட், ஓரியோ இந்த வரிசையில் ஆண்ட்ராய்டு பி என்னும் வெர்சன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த அப்டேட்டட் வெர்சனில் ஆண்ட்ராய்டில் இதுவரை இருந்துவந்த பாதுகாப்புக் குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில், “தற்போது ஆண்ட்ராய்டு செயலிகள் இணைய வசதியைப் பயன்படுத்தி நம் போனின் நெட்வொர்க் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகிறது. இது பெரும்பாலும் பயனர்களின் அனுமதியின்றி அவர்களுக்குத் தெரியாமலேயே நடக்கிறது.

தற்போது புதிதாக வரவுள்ள ஆண்ட்ராய்டு பி வெர்சனில் உள்ள ஆண்ட்ராய்டு செயலிகள் மொபைலில் உள்ள நெட்வொர்க் செயல்பாடுகளைக் கண்காணிக்கவோ, இயக்கவோ முடியாது.

ஆண்ட்ராய்டில் பயன்படுத்தப்படும் proc/net என்னும் புரோக்ராம்தான் நெட்வொர்க் சார்ந்த தகவல்களைச் சேமித்துவைக்கும் திறன் கொண்டது. இந்த புரோகிராமானது புதிய ஆண்ட்ராய்டு வெர்சனில் லாக் செய்யப்பட்டிருக்கும். இதன்மூலம் தகவல்கள் திருடப்படுவது தவிர்க்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon