மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

முத்தக் காட்சி: கேள்வி எழுப்பும் சமந்தா

முத்தக் காட்சி: கேள்வி எழுப்பும் சமந்தாவெற்றிநடை போடும் தமிழகம்

தனக்குத் திருமணமான காரணத்தினால்தான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்கள் குறித்து விமர்சனங்கள் எழுவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளிவந்த ரங்கஸ்தலம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ராம் சரண், சமந்தா மற்றும் ஆதியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. முழுக்க கிராமத்து பெண்ணாகத் திரையில் தோன்றிய சமந்தாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன.

அதே சமயம் திருமணத்திற்குப் பின்னர் சமந்தா நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சி குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து டெக்கான் கிரானிக்கிளுக்குப் பேட்டி அளித்துள்ள அவர், "அந்தக் காட்சியில் நான் கன்னத்தில்தான் முத்தம் கொடுத்தேன். ஆனால் அந்தக் காட்சி போட்டோகிராபி டிரிக் மூலம் லிப் கிஸ் கொடுத்ததாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மேலும் விவரிக்க விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்

இதே முத்தக் காட்சியில் ஓர் ஆண் நடிகர் நடித்தால் இதுபோன்ற கேள்விகள் ஏன் எழுவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஒரு பெண் என்பதால்தான் தன்னை நோக்கி இது போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன; ஆனாலும் தன்னுடைய குடும்பத்தினர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும், குறிப்பாக தன்னுடைய மாமனார் நாகார்ஜுனா தனக்கு முழு ஆதரவு கொடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு வரும் விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, "நான் அதைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். நான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களைக் குறித்து விமர்சனங்கள் வருகின்றன. அதற்காக நான் புடவை கட்டிக்கொண்டு கடற்கரைக்குச் செல்ல முடியாது. நான் திருமணமானவர் என்பதால்தான் விமர்சனத்திற்கு ஆளாகிறேன். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon