மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

இந்தியாவுக்கு உதவும் உலக வங்கி!

இந்தியாவுக்கு உதவும் உலக வங்கி!

இந்தியாவுக்கு 200 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது.

6 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக இந்திய அரசு போஸான் அபியான் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு 200 மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய நிதியமைச்சகம் மே 7ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை தற்போது இந்தியாவில் 38.4 விழுக்காடாக உள்ளது. இதை 2022ஆம் ஆண்டுக்குள் 25 விழுக்காடாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு உலக வங்கி 200 மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசும், உலக வங்கியும் மே 7ஆம் தேதி கையெழுத்திட்டன’ என்று கூறியுள்ளது.

போஸான் அபியான் திட்டமானது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிரமதர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய திட்டத்தைப் புதுப்பித்து, குழந்தைகளுக்கு முழுமையான ஊட்டச்சத்து வசதிகள் அளிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் உலக வங்கியின் உதவியைக் கொண்டு அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு மாவட்ட அளவில் ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை அமைப்புகள் வலுப்படுத்தப்படவுள்ளன.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon