மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

மாற வேண்டியது ஆண்களின் மனநிலையே!

மாற வேண்டியது ஆண்களின் மனநிலையே!

பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்குப் பெண்களின் ஆடை காரணமல்ல ஆண்களின் மனநிலைதான் காரணம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகப் பெண்கள் மீதும் பெண்குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ஜம்மு கஷ்மீரின் கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாட்டை பெரும் அதிர்வுக்குள்ளாக்கியது. இத்தகைய நிகழ்வைத் தொடர்ந்து பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று(மே 7 ) நடைபெற்ற பாலின பாகுபாடு தொடர்பான ஆய்வறிக்கை குறித்த ஃபிக்கி அமைப்பின் கருத்தரங்கங்களில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடை பெற்றுவருவது கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணுக்கு தெரிந்த நபராலேயே அதாவது நண்பர்கள், தெரிந்தவர்கள், நெருங்கிய குடும்ப உறவுகள் என நன்கு அறிமுகமான உறவுகளாலேயே பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதால் அதை எப்படி வெளி நபர்களால் தடுக்க முடியும். பெண்கள் மீது அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பெண்களின் ஆடை தான் காரணம் என சிலர் கூறுகிறார்கள் அப்படியானால் குழந்தை முதல் முதியோர் வரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாவது ஏன்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்று ஒவ்வொரு 10 பாலியல் வன்கொடுமைகளில் 7 சம்பவங்கள் மிக நெருக்கமான உறவுகளாலேயே நடைபெறுவதுதான். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க சட்டம் மட்டும் போதாது. குடும்பங்களிலிருந்து சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

சமீபத்தில் மோடி கூறியது போல பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அறிவுரைகள் அனைத்தும் ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon