மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

பெண்ணுக்குக் கட்டாயத் திருமணம் ரத்து: உச்ச நீதிமன்றம்!

பெண்ணுக்குக் கட்டாயத் திருமணம்  ரத்து: உச்ச நீதிமன்றம்!

பெண்ணுக்கு செய்து வைத்த கட்டாயத் திருணத்தை ரத்து செய்து அவர் விரும்பியவரைத் திருமணம் செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளி்த்துள்ளது.

பெங்களுரூவைச்சேர்ந்த செல்வாக்கான அரசியல்வாதி ஒருவரின் மகள் கட்டயப்படுத்தி திருமணம்செய்து வைத்தது பிடிக்கவில்லை என்றும் எனது கணவர் குடும்பத்தினர் என்னை சித்ரவதை செய்கின்றனா் என்றும் கூறி டெல்லிக்குத் தப்பி வந்தார். டெல்லியில் தனக்குப் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கு மனுவில், “பெங்களுரூவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியின் மகளாகிய நான் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டேன். நான் ஒருவரைக் காதலித்து வந்தேன். அவரிடமிருந்து என்னைப் பிரித்து வலுக்கட்டாயமாக வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். என் கணவர் வீட்டார் என்னைக் கொடுமைப்படுத்தியதால் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்துவிட்டேன். தற்போது நான் பெங்களுருவுக்குச் சென்று எனது பொறியியல் முதுகலைப் படிப்பைத் தொடர விரும்புகிறேன் . ஆனால் எனது பெற்றோரும் கணவர் வீட்டாரும் என்னை அச்சுறுத்திவருவதால் அவர்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

பெண்ணின் சார்பாக ஆஜரான உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், மனுதாரரை அவர்கள் குடும்பத்தினரே பாலியல் வன்கொடுமை செய்யப்போவதாக மிரட்டி வருகின்றனா் என்று கூறினார்.

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏஎம்.கான்வில்கார் மற்றும் டிஓய்.சந்திரசூத் ஆகியோர், “நீங்கள் வயது வந்தவர், நீங்கள் எங்கு விரும்புகிறீர்களோ அங்கு செல்லலாம். நீங்கள் விரும்பியதைப் படிக்கலாம்” என்று கூறி அவருக்கு நடந்த கட்டயத் திருமணத்தையும் ரத்து செய்து அந்தத் திருமணம் செல்லாது என்றும் அறிவித்தனா்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு டெல்லி பெண்கள் ஆணையத்தின் கண்காணிப்பில் டெல்லி போலீசாரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon