மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

பருத்தி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பருத்தி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனம் உரிமை கோர முடியாது என்ற டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மே 6ஆம் தேதி மறுத்துவிட்டது.

உலகின் மிகப்பெரிய விதை தயாரிப்பு நிறுவனமாக மான்சாண்டோ விளங்குகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பயிரிடப்படும் மரபணு மாற்றுப் பருத்திக்கி உரிமைகோரி வழக்கு தொடர்ந்திருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் மான்சாண்டோ நிறுவனத்துக்குக் காப்புரிமை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இந்நிறுவனம் முறையிட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை மே 6ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துள்ளனர்.

கடந்த மாதத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ’நுஜிவீடு சீட்ஸ்’ நிறுவனத்தின், இந்திய காப்புரிமைச் சட்டம், மான்சாண்டோ நிறுவனத்தின் காப்புரிமை அட்டையை அனுமதிக்காது என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டது. மான்சாண்டோ நிறுவனத்தின் பருத்தி விதைகளை நேரடியாக அப்படியே பயிரிட இந்திய அரசு அனுமதிப்பதில்லை. ஆய்வுக் கூடங்களில் மாற்றம் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இந்த நடைமுறை 2003ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. அதற்குப் பிறகு 2006ஆம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மறுப்பு குறித்து மான்சாண்டோ இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "இந்த வழக்கில் நாங்கள் வெல்வோம் என்று உறுதியாக நம்புகிறோம். கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலகின் பல பகுதிகளில் மனிதர்களால் தயாரிக்கப்பட்ட விதைகளுக்கு இந்தியா காப்புரிமை வழங்கியுள்ளது' என்று கூறியுள்ளார். பருத்தியைப் பொறுத்தவரையில் மரபணு விதைகளுக்கான சந்தையில் 90 விழுக்காடு பங்களிப்புடன் மான்சாண்டோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon