மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

விநாயகருக்கு ஏசி!

விநாயகருக்கு ஏசி!

கோடை கால வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.வெயிலின் உக்கிரத்தினால் மக்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படுகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கோடை வெயிலை சமாளிப்பதற்கு விநாயகருக்கு ஏசி பொருத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அங்குள்ள பக்தர்கள் வெயில் காலத்தில் விநாயகர் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்று நினைத்து அவர் இருக்கும் இடத்தை குளிர்ச்சியாக்க விரும்பினர். இதையடுத்து, விநாயகருக்கு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் புதிது அல்ல. இதற்கு முன்பு அயோத்தியில் கடவுள் சிலைக்கு ஹீட்டர் பொருத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வடமாநிலங்களில் குளிரும், பனிப்பொழிவும் மக்களை வாட்டி வதைத்தது. உத்தர பிரதேச மாநிலம் ஃபைஸாபாத் அருகேயுள்ள அயோத்தியில் ஜானகி காத் படா ஸ்தான் என்ற கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கருவறைக்குள் குளிரைத் தாங்கும் பொருட்டு ஹீட்டர் பொருத்தப்பட்டது. மேலும், கடவுளுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடவுள் சிலைக்கு ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகி கூறினார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon