மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

டெஸ்டிலிருந்து பின்வாங்கிய இந்தியா!

டெஸ்டிலிருந்து பின்வாங்கிய இந்தியா!

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் எந்தப் பகல் இரவு ஆட்டங்களிலும் இந்தியா விளையாடாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் பிங்க் பந்தைக் கொண்டு விளையாடும் பகல் இரவு போட்டிகளில் விளையாடிவருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது; 4 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அடிலைட்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக நடத்தும் பணிகளில் ஆஸ்திரேலியா இறங்கியது. ஆனால் இதற்கு இந்திய அணி எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து இந்திய அணியின் செயலாளரான அமிதாப் சௌதரி ஆஸ்திரேலிய அணியின் தலைமை நிர்வாகியான சதர்லேண்டிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், “இந்திய அணி இந்த வடிவத்தை விளையாடுவதற்கும், ஆட்டத்தின் தன்மை மற்றும் நுணுக்கங்களை அறிவதற்கும் ஒரு வருடம் தேவைப்படும். இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பகல்-இரவுப் போட்டியில் இந்திய அணி பங்கேற்காது என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க முதல் டெஸ்ட் போட்டியை எப்போதும் போல பகல் போட்டியாக நடத்துவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணி இதுவரை நடைபெற்ற பகல்-இரவுப் போட்டியில் தோல்வி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon