மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

துபாய் செல்லும் மணிரத்னம் டீம்!

துபாய் செல்லும் மணிரத்னம் டீம்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் செக்க சிவந்த வானம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து செக்க சிவந்த வானம் படத்தில் களமிறங்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பின்போது எடுக்கப்படும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் படக்குழுவினர் பகிர்ந்துவந்தனர். அந்த வரிசையில் சமீபத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் ஆகிய நான்கு கதாநாயகர்களும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியானது. தற்போது, அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு துபாய் செல்கின்றனர். ஏற்கனவே அரவிந்த் சாமி தொடர்புடைய காட்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விஜய் சேதுபதி மற்றும் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் துபாயில் படமாக்கப்படவுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் முன்னதாக வெளிவந்த காற்று வெளியிடை திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த படத்தின் காட்சிகளையும் துபாயில் படமாக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் லைகா புரொடக்‌ஷனுடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் இந்த மாதமே நிறைவு செய்யவிருப்பதாக கூறப்படும் நிலையில் விரைவில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon