மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

சோனம் கபூர்: திருமணத்திலும் பிரம்மாண்டம்!

சோனம் கபூர்: திருமணத்திலும் பிரம்மாண்டம்!

பாலிவுட் நடிகை சோனம் கபூர், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா திருமணம் இன்று (மே 8) நடைபெறுவதையொட்டி, பாலிவுட் உலகமே விழாக்கோலத்தில் இருக்கிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பியும் பாலிவுட் நடிகருமான அனில் கபூரின் மகள்தான் சோனம் கபூர். கடந்த சில நாள்களாகவே, சோனம் கபூரின் திருமணம் குறித்த பதிவுகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம்வந்துகொண்டிருந்தன.

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 6), சோனம் கபூருக்கு மெகந்தி விழா நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கபூர் வீடு களைகட்டியது. ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினர். மணப்பெண் சோனம் கபூருடன் அவரின் தங்கைகள் அன்ஷுலா, ஜான்வி, குஷி மற்றும் ஷனாயா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வலம்வந்தன.

சோனம் கபூரும், ஆனந்த் அஹுஜாவும் கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்துவந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று நண்பகல் மும்பை பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் திருமணம் நடைபெற்றுள்ளது. மாலை லீலா ஹோட்டலில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

திருமணத்திற்குப் பின் சோனம் கபூர் உடனடியாக கேன்ஸ் விழா, வீரே தி வெண்டிங்கின் விளம்பர வேலைகள், ‘ஏக் லட்கி கோ தேகா தோ ஏசா லாகா’ மற்றும் ‘தி சோயா ஃபாக்டர்’ திரைப்படங்களின் ஷூட்டிங் என அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தவுள்ளார். கேன்ஸ் விழா வரும் 14, 15ஆம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. இதில் ஆனந்த் அஹுஜா கலந்துகொள்ளமாட்டார் என்று சோனம் கபூர் தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon