மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

ஆனந்தியைத் தேர்ந்தெடுத்த நவீன்

ஆனந்தியைத் தேர்ந்தெடுத்த நவீன்

மூடர்கூடம் படத்தைத் தொடர்ந்து நவீன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் நவீன். 2013ஆம் ஆண்டு வெளியான மூடர்கூடம் படம் வசூல் ரீதியாகச் சாதனை படைக்காவிடினும் ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. பிளாக் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தின் வசனங்கள் இன்றளவும் கொண்டாடப்படும் வகையில் அமைந்துள்ளன. நவீனே இந்தப் படத்தில் பிரதான வேடத்தை ஏற்றிருந்தார். ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்திருக்கிறார் நவீன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், அவரே ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இந்தப் படம் குறித்த ஒரு தகவலைக்கூட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நவீன், விரைவில் இதன் தலைப்பை வெளியிட இருக்கிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் நவீன் இயக்கும் மற்றொரு படம் பற்றிய அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது குறிப்பிட்டதக்கது.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon