மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

விலையில்லாமல் வீணாகும் தர்ப்பூசணி!

விலையில்லாமல் வீணாகும் தர்ப்பூசணி!

சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியில் தர்ப்பூசணிப் பழங்களின் விலை முன்னெப்போதும் அல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இடைப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி, காட்டூர், நெடுங்குளம், பூலாம்பட்டி, மூலப்பாதை, தண்ணீர்தாசனூர், காவேரிப்பட்டி, கல்லப்பாளையம், பெரமச்சிபாளையம், குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, சுண்ணாம்புகரடு, புள்ளக்கவுண்டம்பட்டி, தேவூர், அண்ணமார்கோயில், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் ஹைபிரிட் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன. இவ்வகை தர்ப்பூசணி 1 கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது பெய்துவரும் மழையால், வியாபாரிகள் 1 கிலோ தர்ப்பூசணியை ரூ.2க்கு வாங்குகின்றனர். போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தர்ப்பூசணிப் பழங்களைப் பறிக்காமல், தங்களது வயல்களிலேயே விட்டுவிட்டனர். அதிக செலவு செய்து உற்பத்தி செய்த தர்ப்பூசணிப் பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காததால் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon