மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: மோர்க்குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: மோர்க்குழம்பு!

வெயில் காலம் வந்தாலே மோர் சீக்கிரமே புளித்துவிடுகிறது என்று புலம்பிக்கொண்டிருக்காமல், அதை வைத்து குளிர்ச்சியான மோர்க் குழம்பு செய்யலாம் வாங்க.

தேவையானவை:

புளித்த மோர் - 2 டம்ளர், துவரம் பருப்பு - 1 கைப்பிடி, தேங்காய்த் துருவல் - கால் மூடி, காய்ந்த மிளகாய் - 5, சீரகம் - 1 தேக்கரண்டி, தனியா - 1 தேக்கரண்டி, பூண்டு - 4 பல், பெருங்காயம் - சிறிது, மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி, கடுகு - அரை தேக்கரண்டி, எண்ணெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை:

துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் தேங்காய், மிளகாய், சீரகம், தனியா, பூண்டு, பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அரைத்த மசாலாவை ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். கெட்டியாக வரும்போது கடைந்த மோரை ஊற்றவும். நுரைத்து வந்ததும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். சுவைமிகுந்த மோர்க்குழம்பு ரெடி!

கீர்த்தனா சிந்தனைகள்:

‘தட்டி’ கேட்டால்தான் தண்ணீர் தருகிறது தேங்காய்!

திங்கள், 7 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon