மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மே 2018

சந்தேகத்துக்குரிய நபர் குறித்து புகார் தெரிவிக்க எண்!

சந்தேகத்துக்குரிய நபர் குறித்து புகார் தெரிவிக்க எண்!

வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்மீது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்குப் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலத்திலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளைக் கடத்துவதற்குத் தமிழகம் வந்துள்ளதாகச் சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது. காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால் அங்கே அதிகளவில் வடமாநிலத்தவர்கள் வேலைபார்த்து வருகின்றனர். எனவே, பரவிவரும் வாட்ஸ்அப் தகவலால் மக்கள் யாரையும் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் போலீஸார் ஒரு யுக்தியைக் கையாண்டுள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குழந்தைகளைக் கடத்தும் நோக்கில் சந்தேகத்துக்குரிய நபர்களைப் பார்த்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் அவர்களை தாக்கக் கூடாது. அவர்களது உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பிரசுரங்களை வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மேற்கொண்டனர். இதுகுறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் காவல் கோட்டம் - 9498100261

பெருமந்தூர் காவல் கோட்டம் - 9498100262

செங்கல்பட்டு - 9498100263

மதுராந்தகம் - 9498100264

மாமல்லபுரம் - 9498100265

வண்டலூர் - 9498100306

காஞ்சி காவல் கட்டுப்பாட்டு அறை - 044-27222000

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

செவ்வாய் 8 மே 2018