மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

மின்சார உற்பத்திக்கு நிலக்கரி சப்ளை!

மின்சார உற்பத்திக்கு நிலக்கரி சப்ளை!

மின் உற்பத்தி நிறுவனங்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கோல் இந்தியா நிறுவனம் தனது நிலக்கரி விநியோக அளவை 14 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மின்சாரத் துறைக்கு மொத்தம் 35.20 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியை மட்டுமே கோல் இந்தியா நிறுவனம் விநியோகம் செய்திருந்தது. இந்த நிலையில் 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 14.4 சதவிகித உயர்வுடன் மொத்தம் 40.30 மில்லியன் டன் அளவிலான நிலக்கரியைக் கோல் இந்தியா நிறுவனம் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு விநியோகம் செய்துள்ளது. இது 5.1 மில்லியன் டன் கூடுதலாகும். பருவ மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக மின்னுற்பத்தி நிறுவனங்களின் கையிருப்பு அளவு 16 மில்லியன் டன் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

தினசரி நிலக்கரி சரக்குப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில், ஏப்ரல் மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 245.7 பெட்டிகள் அளவிலான நிலக்கரி சப்ளை செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத சராசரியை (222.6 பெட்டிகள்) விட இது 10.4 சதவிகிதம் அதிகமாகும். முன்னதாக மார்ச் மாதத்தில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சரான பியூஷ் கோயல், மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கத் தினசரி 500 பெட்டிகள் அளவிலான நிலக்கரியை விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon