மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

எப்படியோ நல்ல நண்பர்களைப் பிடிச்சிருப்பீங்க! ஆனா, எனக்கு ஒரு சந்தேகம் குட்டீஸ்... உங்களையும் உங்க நண்பர்களையும், ஊர் பேர் தெரியாத இடத்துல கொண்டுபோய் விட்டுட்டா என்ன பண்ணுவீங்க? ரொம்ப கஷ்டம்ல? பூமியில தெரியாத ஓர் இடத்துல விட்டாலே கஷ்டம்னா, பூமிக்கு வெளிய கொண்டுபோய் உங்கள விட்டுட்டா? என்னது? சந்தோஷமா இருப்பீங்களா!? அப்படினா விண்வெளியில எங்க தங்குவீங்க? ஒரு ரகசிய இடம் உங்களுக்கு மட்டும் சொல்லுறேன் வாங்க!

அப்படி விண்வெளிக்குப் பயணம் போனால், அங்கே மனிதர்கள் தங்குவதற்குன்னு ஓர் இடம் இருக்கு. என்னன்னு தெரியுமா? நிலாவோ, வேறு கிரகமோ இல்ல. மனிதர்களே உருவாக்குன ஓர் இடம். அது ஒரு செயற்கைக்கோள். மிகப் பெரிய செயற்கைக்கோள். அந்தச் செயற்கைக்கோள் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? நாளைக்கு விண்வெளிக்குப் போனா யூஸ் ஆகும்

அதன் பெயர் ISS (International Space Station). அதாவது சர்வதேச விண்வெளி நிலையம். நம்ம உள்ளூர் பேருந்து நிலையம் மாதிரி, விண்வெளில இருக்கிற நிலையம். ஆனா, ஒரே ஒரு வேறுபாடு. நம்ம பேருந்து நிலையத்துல, நிலையம் அங்கேயே இருக்கும். பேருந்துகள் சுத்திட்டு வரும். ஆனா, விண்வெளியில, நிலையமே சுத்திட்டு வரும். அதுவும் மெதுவாலாம் இல்ல. 27,724 கிலோமீட்டர் வேகத்துல.

இந்த வேகத்துல நாம பேருந்தை இயக்குனோம்னா, ஒரே நாள்ல நிலாவுக்குப் போயிட்டு திரும்ப வந்திடலாம். பூமியில இருந்து கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு இந்தச் செயற்கைக்கோள். முன்னாடி சொன்ன மாதிரி, இந்தச் செயற்கைக்கோளின் சிறப்பம்சமே இது மனிதர்கள் தங்கிச் செல்லக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டது என்பதுதான்.

ஆறு பேர் கொண்ட குழு தங்குவதற்கும், பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி செய்வதற்கும்னு நல்லா பெருசாவே கட்டியிருக்காங்க.

விண்வெளியில சுத்திட்டு இருக்கிற அந்தச் செயற்கைக்கோள் பூமியில விழுந்தா எவ்ளோ பாதிப்பு இருக்கும் தெரியுமா?

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon