மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மே 2018

ஷாப்பிங் ஸ்பெஷல்: சருமத்துக்கேற்ற பிரைமர் எது?

ஷாப்பிங் ஸ்பெஷல்:  சருமத்துக்கேற்ற பிரைமர் எது?

முகத்தில் அப்ளை செய்யும் ஃபவுண்டேஷன், நீண்ட நேரம் நிலைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு சரியான பிரைமரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். உங்களின் ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற பிரைமர் எது என்பதை இந்தச் சிறிய தொகுப்பின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

பிரைமர்

என்னதான் நாம் பார்த்துப் பார்த்து ஃபவுண்டேஷன் , காம்பேக்ட் பவுடர், கான்ட்டூர் எனத் தேர்வு செய்தாலும், அவற்றைச் சிறப்பாக அப்ளை செய்ய வேண்டுமெனில், அதற்கு பிரைமர் மிகவும் அவசியம். சருமத்தின் மீது மெல்லிய படலத்தைப் போல செயல்படும் இந்த பிரைமர், ஃபவுண்டேஷனை ஸ்மூத்தாக அப்ளை செய்ய உதவுகிறது. எளிதில் சருமத்தோடு ஒட்டிக்கொண்டு சீராக பிளெண்ட் செய்ய முடியும். அது மட்டுமின்றி முகத்தின் பளபளப்பையும் அதிகரிக்கிறது. அப்ளை செய்த மேக்கப் கலையாமல், அதிக நேரம் பாதுகாக்கிறது. ஆகவே பிரைமரை சரியான முறையில் தேர்ந்தெடுத்தாலே, நமக்கு இருக்கும் மேக்கப் பிரச்சினைகளில் பாதி சரியாகிவிடும்.

ஸ்கின் டைப்

பொதுவாக சரும வகைகளில் வறண்ட, எண்ணெய்ப் பசை கொண்ட, இந்த இரண்டும் சேர்ந்த மற்றும் சென்சிடிவ் ஸ்கின் என, சருமத்தில் நான்கு வகைகள் உள்ளன. இந்த நான்கு ஸ்கின் டைப்பிற்கும் ஏற்ற வகையில், பிரைமர்கள் கிடைக்கின்றன. எனவே உங்களின் ஸ்கின் டைப் எது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு அதைத் தெரிந்துகொள்வதில் சிரமம் எனில், பியூட்டீஷியனை அணுகி உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

வறண்ட சருமம்

வறண்ட சருமம் கொண்டோர் மேக்கப் ப்ராடக்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, சற்று கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஃபவுண்டேஷன் அப்ளை செய்த பின் அவை திட்டுத் திட்டாகத் தெரியும். இந்தப் பிரச்சினை உங்களுக்கு இருந்தால், கட்டாயம் பிரைமர் உதவும். நீங்கள் க்ரீமி தன்மை கொண்ட பிரைமரைத் தேர்வு செய்யுங்கள். அது உங்கள் சருமத்திற்கு மாய்ஸ்சரைஸராக செயல்படும். இது சருமத்திற்கு ஈரப்பத்தை அளித்து, ஃபண்டேஷன் எளிதில் பிளெண்ட் ஆக உதவும்.

எண்ணெய் சருமம்

ஆயில் ஸ்கின் கொண்டோருக்கு சருமத் துளைகள் அதிகமாக இருக்கும். அதனால் சிலருக்கு முகப்பரு பாதிப்பு இருக்கும். அவற்றை மறைத்து சீரான மேக்கப்பை அப்ளை செய்ய வேண்டுமெனில், சரியான பியூட்டி ப்ராடெக்ட்டுகளை வாங்குவது அவசியம். நீங்கள் சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பைக் கட்டுப்படுத்த, மேட் தன்மை கொண்ட காஸ்மெட்டிக் பொருட்களை வாங்குவதே சிறப்பு. பிரைமர் வாங்கும்போது மேட் ஃபினிஷிங் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் பிரைமரே இல்லாமலும் மேக்கப் செய்யலாம். பிரைமர் உங்கள் சருமத்திற்கு மேலும் ஈரப்பதத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே நீங்கள் அதற்குச் சிறப்பான மேட் தன்மை கொண்ட ஃபவுண்டேஷனை நேரடியாக அப்ளை செய்து, உங்கள் அழகைக் கூட்டலாம்.

காம்பினேஷன் ஸ்கின்

பெரும்பாலானோர், காம்பினேஷன் ஸ்கின் டைப்பில்தான் இருப்பார்கள். இவர்கள் சரியான மேக்கப் பொருட்களை வாங்குவது சிரமத்திலும் சிரமம். காம்பினேஷன் சருமத்திற்கு, முகத்தின் ஒரு சில பகுதியில் மட்டும் அதிகளவு எண்ணெய் பிசுபிசுப்பும், மற்ற பகுதிகள் வறண்டும் காணப்படும். எனவே இரண்டிற்கும் ஏற்ப பிரைமர் வாங்குவது மிகவும் கடினமான விஷயம். எனவே நியூட்ரல் தன்மை கொண்ட பிரைமர் அல்லது மாட் தன்மை கொண்ட பிரைமரைத் தேர்வு செய்யுங்கள். இவை இரண்டையும் வாங்கினாலும் நல்லது. சூழலுக்கு ஏற்ப அப்ளை செய்துகொள்ளலாம்.

சென்சிடிவ் ஸ்கின்

சென்சிடிவ் ஸ்கின்னிற்கு எந்த பியூட்டி பப்ராடக்ட்டுகளை அப்ளை செய்தாலும் கவனம் வேண்டும். இத்தகைய சருமம் கொண்டோருக்கு, எப்போதும் ஏதாவதொரு சருமப் பிரச்சினை வந்துபோகும். தோல் சிவத்தல் இவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருக்கும். இவர்கள் பச்சை நிறத்தை அடிப்படையாகக் கொண்ட பிரைமரைத் தேர்வு செய்வது எடுப்பாக இருக்கும். இது சருமத்தின் சிவத்தல் பிரச்சினையை மறைத்து, தெளிவான முகத் தோற்றத்தை அளிக்கும்.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

செவ்வாய் 8 மே 2018