மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

மவுசு குறையும் தங்க நகைகள்!

மவுசு குறையும் தங்க நகைகள்!

நிதி நெருக்கடி மற்றும் அதிக விலை காரணமாக இந்த ஆண்டில் தங்க நகைகளுக்கான தேவை 2 முதல் 4 சதவிகிதம் வரையில் குறையும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இக்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘கடந்த மூன்று மாதங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை மிக அதிகமாக இருந்து வருகிறது. முகூர்த்த தினங்கள் குறைவாக இருப்பதாலும் தங்க நகைகளுக்கான தேவை குறைந்துள்ளது. வங்கி மோசடி விவகாரத்தைத் தொடர்ந்து நகை மற்றும் ரத்தினங்கள் துறையினருக்கு வங்கிகள் கடன் வழங்கவே தயங்குகின்றன. இதனால் நகை விற்பனையாளர்களுக்குப் போதிய மூலதனம் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே இந்த ஆண்டில் (2018) நகைகளுக்கான தேவை 2 முதல் 4 சதவிகிதம் குறைவாகவே இருக்கும். எனினும், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நிலைமை சீராகி நகைகளுக்கான தேவை 6 முதல் 7 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும். வருவாய் உயர்வு மற்றும் கிராமப் புறங்களில் நகைகளுக்கான தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி சாத்தியமாகும்.

மதிப்பு அடிப்படையில் 2018ஆம் ஆண்டில் தங்க நகைகளுக்கான தேவை 5 முதல் 7 சதவிகிதம் வரையிலான வளர்ச்சியைக் கொண்டிருக்கும். முன்னதாக 2017ஆம் ஆண்டில் தங்க நகைகளுக்கான தேவை, அளவு அடிப்படையில் 12 சதவிகிதமும், மதிப்பு அடிப்படையில் 9 சதவிகிதமும் வளர்ச்சி கண்டிருந்தது. அந்த ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியது மற்றும் நகைத் துறையை நிதி மோசடிச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது ஆகிய விளைவுகளையும் தாண்டி நகைகளுக்கான தேவை அதிகரித்திருந்தது. முகூர்த்த தினங்கள் அதிகமாக இருந்ததாலும் இந்த வளர்ச்சி சாத்தியமானது. ஆனால் இந்த ஆண்டில் நகை விற்பனை மந்தமாகவே இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon