மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை: 8 தனிப்படை !

துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை: 8 தனிப்படை !

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கியைக் காட்டி ரூ. 6 லட்சம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களை பிடிப்பதற்கு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள அசேசம் கிராமத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒருநாளைக்கு 10 லட்சம் வரை வரவு செலவு நடப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று(மே 7) மதியம் ஐந்து பேர் முகமூடிஅணிந்தபடி கையில் துப்பாக்கியோடு வங்கியில் நுழைந்தனர். 80 கிராம் தங்க நகைகள், காசாளர் அறையில் இருந்த ரூ.6 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் திருவாரூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனம், மன்னார்குடி டி.எஸ்.பி அசோகன், ஆகியோர் தலைமையிலான போலீசார் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், கொள்ளை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்படி, திருடர்களை பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon