நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 375 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் மே 7ஆம் தேதி நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டை உற்பத்தி, சந்தை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்ததையடுத்து சென்ற வாரம் ரூ.3.70க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை, 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.75ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்: சென்னை ரூ.3.85, ஹைதராபாத் ரூ.3.30, விஜயவாடாரூ.3.39, பர்வாலா ரூ.3.23, மும்பை ரூ.3.81, மைசூர் ரூ.3.73, பெங்களூரு ரூ.3.65, கொல்கத்தா ரூ 3.93, டெல்லி ரூ.3.42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோழி விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கிலோ ஒன்று ரூ.73 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஒரு கிலோ 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி 2 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது கிலோ ஒன்று ரூ.101க்கு விற்கப்படுகிறது.