மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

வீடுகளுக்கான பணவீக்கம் உயர்வு!

வீடுகளுக்கான பணவீக்கம் உயர்வு!வெற்றிநடை போடும் தமிழகம்

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வீடுகளுக்கான பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், 2018ஆம் ஆண்டில் அது 8.3 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீடுகளுக்கான பணவீக்கம் 2012ஆம் ஆண்டில் வெறும் 9.2 விழுக்காடாக இருந்தது. பின்னர் மெல்ல மெல்லக் குறைந்து 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் சராசரியாக 5 விழுக்காடாக இருந்தது. அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வீடுகளுக்கான பணவீக்கம் 4.7 விழுக்காடாகக் குறைந்தது. இதுபற்றி ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில், ’2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நுகர்வோர் விலைக் குறியீட்டில் உள்ள வீடுகளுக்கான குறியீட்டில், ஏழாவது ஊதியக் குழுவின் வீட்டு வாடகைச் சலுகை அதிகரிப்பின் தாக்கம் இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதியக் குழுவின் ஊதியம், சலுகை உயர்வுகளைப் போலவே தமிழ்நாடு, ராஜஸ்தான், அசாம், டெல்லி போன்ற மாநில அரசுகளும் அறிவித்துள்ளன. இந்த நான்கு மாநிலங்களுக்கு மொத்தமாக நுகர்வோர் விலைக் குறியீட்டில் 17.3 விழுக்காடு பங்கு உள்ளது. எனினும், ஊதியம் மற்றும் சலுகைகளில் மாநில அரசுகள் திருத்தங்களை மேற்கொண்டதால் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கத்தில் எந்தவொரு தாக்கமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

வெள்ளி, 4 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon