மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

100 கோடி பயணிகளை ஈர்க்கத் திட்டம்!

100 கோடி பயணிகளை ஈர்க்கத் திட்டம்!வெற்றிநடை போடும் தமிழகம்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய விமானத் துறை 1 லட்சம் கோடி ரூபாயை கூடுதலாக முதலீடு செய்யும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.

இதுகுறித்து மே 2ஆம் தேதி செய்தியாளர்களிடம் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், "விமானங்கள் மூலம் ஒரு பில்லியன் (100 கோடி) பயணங்களை உருவாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது. இதனால் விமானத் துறையின் முதலீடு 5 லட்சம் கோடியிலிருந்து 6 லட்சம் கோடியாக அதிகரிக்கும். கூடுதலாக முதலீடு செய்யப்படவுள்ள 1 லட்சம் கோடி வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதன் அடிப்படையில் கிரீன்ஃபீல்டு விமான நிலையங்களை அமைப்பதற்கான ஒப்புதல்களை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அளித்துள்ளது. இதில் சென்னை விமான நிலையத்திற்குப் புதிதாக ஒரு முனையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல கவுகாத்தி மற்றும் லக்னோ விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் குறித்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஜி.பி.மோகன்பத்ரா கூறுகையில், "ரூ.5,082 கோடியில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இதில் 60 விழுக்காடு கடன் பெற்றும், எஞ்சிய தொகை சொந்தமாகவும் செலவிடப்படவுள்ளது" என்றார்.

வியாழன், 3 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon