நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார், வாழை இலை, வெற்றிலை ஆகியவற்றின் மொத்த விற்பனை வாரந்தோறும் நடக்கிறது .
இந்நிலையில் இந்த வாரத்திற்கான ஏலத்திற்கு பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைத்தார் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் பெரும்பாலான ரகங்களின் விற்பனை விலை கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்துள்ளது. பூவன் வாழை தார் ஒன்று 800 ரூபாய்க்கும், கற்பூரவள்ளி தார் ஒன்று 700 ரூபாய்க்கும், பச்சை நாடன் தார் ஒன்று 800 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 800 ரூபாய்க்கும், மொந்தன் வாழைக்காய் தார் ஒன்று 900 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
இவையனைத்தும் கடந்த வாரத்தில் 100 ரூபாய் குறைவாகவே விற்பனையாகியிருந்தன. இந்நிலையில் இந்தவாரம் கூடுதலாக விற்பனையாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரமத்திவேலூரைப் பொறுத்தவரையில் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இதனால் இப்பகுதிகளில் வருடம் முழுவதும் வாழை இலை மற்றும் வாழைத்தார் விற்பனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.