மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

அதென்ன தமிழ் சினிமாவின் கடிவாளம்?

அதென்ன தமிழ் சினிமாவின் கடிவாளம்?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 59

இராமானுஜம்

தமிழ் சினிமா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் புதிய படங்கள் ரிலீஸாகத் தொடங்கிவிட்டாலும், எந்த படமும் நிலையாகத் தியேட்டரில் நிற்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தியா,பக்கா, பாடம் ஆகிய மூன்று படங்களும் வந்த வேகத்தில், வந்த வழியே திரும்பத் தொடங்கியுள்ளதாக தகவல்.

அவெஞ்சர்ஸ்: Infinity war திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. கடிவாளமில்லாத குதிரை தறிகெட்டு ஓடி முட்டுச்சந்தில் முட்டிக்கொள்வதைப் போன்ற நிலை தான் இன்று தமிழ் சினிமா சந்தித்து வருகிறது. கடிவாளம் இன்றி குதிரை ஓடாமல் பார்த்துக் கொண்டவர்களாக இருந்தவர்கள் தான் திரைப்பட விநியோகஸ்தர்கள். என்றைக்கு அவர்களது முக்கியத்துவம் குறைக்கப்பட்டு ஹீரோயிசம் தறிகெட்டு ஆடத் தொடங்கியதோ, அப்போது முதல் தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் சராசரி குறையத் தொடங்கி இன்று வரை அது தொடர்கிறது.

படத்தயாரிப்பு செலவு முதல் நடிகர்களின் சம்பளம் வரை அனைத்தும் அதிகரித்து வந்திருக்கிறது. வெற்றிப் படங்களின் சராசரி அதிகரிக்கவில்லை. கில்லியும், ஆஞ்சநேயாவும் சூப்பர் டூப்பர் ஹிட் அப்படங்களை தயாரித்த சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்தினத்துக்கு லாபமில்லை என்கிறார்கள். அஜித் - விஜய் இருவருக்கும் அந்த படத்திற்கு பின் 8 மடங்கு சம்பளத்தை கூட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நடித்த படங்களின் வசூல் கூடவில்லை.இவற்றுக் கெல்லாம் காரணம் விநியோகஸ்தர்கள் என்கிற கடிவாளம் தமிழ் பட தயாரிப்பாளர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது தான் என்கின்றனர்.

அப்படி என்றால் இப்போது படங்களை வாங்குபவர்கள் விநியோகஸ்தர்கள் இல்லையா என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

இன்றைக்கு காலையில் பல் துலக்கும் பற்பசை முதல் இரவு அருந்தும் பால் வரை நாம் எதை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிக்கிறது. ஆனால், அதற்கான பணத்தை மட்டும் நாம் செலுத்துகிறோம். பாரம்பரிய உணவு வகைகளே மனித குலத்துக்கு நல்லது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு பாரம்பரிய உணவுப் பொருள்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. அது போன்றுதான் சினிமாவும்.

படங்களின் கதையை தீர்மானிப்பது கதாநாயகர்கள் என்கிற பழக்கத்திற்கு தயாரிப்பாளரும், இயக்குனர்களும் அடிமையான போது சினிமா தயாரிப்பில் பண உதவி மட்டுமல்ல, அனைத்து விஷயங்களிலும் ஆலோசனை, குறைகளை சுட்டிக் காட்டுதல் என அனைத்துமாக இருந்த விநியோகஸ்தர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.

ரஜினி - கமல் இருவரும் படங்களை குறைத்துக் கொள்ள தொடங்கினார்கள். இதனால் புதிய கதாநாயகர்கள் அதிகம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகத் தொடங்கினார்கள். அதே நேரம் விஐயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் போன்ற கதாநாயகர்கள் நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக மாறியது. இதற்கு விநியோகஸ்தர்களே காரணம் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58

ஞாயிறு, 29 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon