மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஏப் 2018

விநியோகஸ்தர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?

விநியோகஸ்தர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 57

இராமானுஜம்

தமிழ் சினிமா தயாரிப்புத் துறை தன்னை தொழில் ரீதியாக தற்காத்துக் கொள்வதற்காக நீண்ட போராட்டத்தை நடத்தி தமிழக அரசின் ஒத்துழைப்புடன், பல்வேறு கோரிக்கைகளுக்குத் திரையரங்கு உரிமையாளர்களிடமும் டிஜிட்டல் நிறுவனங்களிடமும் கொள்கை ரீதியாக ஒப்புதலைப் பெற்றுவிட்டது. தற்போது தயாரிப்புத் துறையை ஒழுங்குபடுத்தும் முயற்சியையும் தொடங்கிவிட்டது. வழக்கம்போல அதை முறியடிக்கும் முயற்சியில் ஒரு கூட்டம் ஏடாகூடமாகப் பேசத் தொடங்கிவிட்டது.

திரையரங்க உரிமையாளர்களும் கடந்த பத்தாண்டுகளாகத் தமிழக அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்துக்கும் வேலைநிறுத்தத்தை முன்வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புதல் பெற்று விட்டனர்

ஐம்பது நாள் வேலைநிறுத்தத்தில் அம்போ எனக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள். தமிழ் சினிமா தயாரிப்புத் துறைக்கு முதுகெலும்பு போன்றவர்கள். சினிமா தொழில் தொய்வின்றி நடந்துவர, தயாரிப்பாளர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்து வந்தவர்கள் விநியோகஸ்தர்கள். 1985 வரை தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களிடம் கதை சொல்லி கருத்து கேட்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் ஆலோசனைப்படி திருத்தங்கள் செய்யப்பட்டதும் உண்டு. ஃபைனான்ஸ் வாங்காமல் விநியோகஸ்தர்கள் அனுப்பும் பணத்தை நம்பி அவுட்டோர் ஷூட்டிங் போன தயாரிப்பாளர்கள் அதிகம்.

படப்பிடிப்பு தொடங்கி முடிவடையும் வரை விநியோகஸ்தர்களிடம் வெளிப்படைத் தன்மையுடன் தயாரிப்பாளர்கள் இருந்தனர். திரையரங்குகளுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நேரடித் தொடர்புகளே இருக்காது. அந்தளவுக்கு முக்கியத்துவம் மிக்கவர்களாக தமிழ் சினிமாவில் இருந்த விநியோகஸ்தர்களுக்கு இன்று முக்கியத்துவம் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன?

திரைப்படத் தயாரிப்பில் கதாநாயகனுக்கு அடுத்து முக்கியத்துவம் மிக்கவர்களாக இருந்த விநியோகஸ்தர்கள் இன்றும் இருக்கிறார்கள்; ஃபைனான்சியர்களாக முகம் மாறியிருக்கிறார்கள். கொடுத்த கடனை வசூலிக்க விநியோகஸ்தர் வேடம் போட்டிருக்கிறார்கள். உண்மையில் விநியோகத் துறையை நேசித்து நாணயமாகத் தொழில் செய்து வந்தவர்கள் தொலைந்துபோனதால் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பற்றி, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு அடிக்கும் கூத்துகளை... ஆச்சர்யமூட்டும் தகவல்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களுடன் நாளை முதல் காணலாம்.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 26 ஏப் 2018