மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஏப் 2018

எங்கே செல்லும் இந்த பாதை?

எங்கே செல்லும் இந்த பாதை?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 52

இராமானுஜம்

தமிழ் சினிமா தயாரிப்பு, விநியோகம், திரையிடல் இவற்றில் இருக்கும் ஒழுங்கீனம், முறைகேடு ஆகியவை களையப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டால் நல்ல படம் எடுக்கின்ற தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் இல்லை. வியாபாரம், வசூல் இவற்றின் அடிப்படையில் படத்தின் பட்ஜெட் இருந்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

தமிழ்நாட்டில் தியேட்டர்களைத் தனிநபர்கள் குத்தகைக்கு எடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் புலம்பல்கள் அதிகம் இருந்தது. சினிமா தொழில் அழிந்துவிடாமலும் லாபகரமாகவும் இருக்க வேண்டும் என்றால் அதன் தொடக்கம் சரி செய்யப்பட வேண்டும். அதைச் செய்யாமல் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

படங்கள் ரிலீஸை ஒழுங்குபடுத்தி, தமிழகத்தில் எத்தனை திரையரங்குகள் ஒரு படத்துக்கு, ஏரியா வாரியாக எத்தனை என்ற பட்டியலை அறிவித்துவிட்டாலே போதுமானது. இதை மீறுகின்ற தயாரிப்பாளரை சங்கம் அழைத்து விளக்கம் கேட்டு முடியாதபட்சத்தில் அவருடன் ஃபெப்சி தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தரமாட்டார்கள் என அறிவியுங்கள்.

தமிழ்நாட்டின் திரையரங்கில் படங்களுக்கு டேம்ஸ் என்ன என்று கேட்டால் ஒவ்வொரு ஏரியாவிலும் வேவ்வேறு விதமான டேம்ஸ் கூறப்படுகிறது. இதை முறைப்படுத்தினால் தமிழ்நாடு முழுவதும் தயாரிப்பாளர்களுக்கு குறைந்தபட்ச லாபம் கிடைக்கும்

டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாஸ்டரிங் பொறுப்பைத் தயாரிப்பாளர்கள் சங்கம் தன்வயப்படுத்தி இருக்கிறது. தங்களது விதிமுறைகளுக்குக் கட்டுப்படாத தியேட்டர்களுக்குப் படங்கள் ரிலீஸ் இல்லை என்று அறிவித்தாலே தயாரிப்பாளர்கள் விரும்பாத சிண்டிகேட் முறை ஆட்டம் காணச் செய்துவிடலாம். அதை நோக்கி தயாரிப்பாளர்கள் சங்கம் செல்கிறதா என்பதே தமிழ் சினிமா ரசிகனின் ஆவலாய் இருக்கிறது.

கலைப்புலி தாணு அவர்கள் சத்யம் சினிமாஸ் தியேட்டர் நல்ல தியேட்டர். தொடரில் எழுதியதுபோல் அந்த தியேட்டர் நிர்வாகம் இல்லை என தொலைபேசி வாயிலாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கட்டுரையாளர் - மறுப்பு

கலைப்புலி தாணு மிகச்சிறந்த மனிதாபிமானி. தன்னை ஏமாற்றியவரைக் கூட நல்லவர் என்று கூறும் பண்பாளர். அதே போன்றுதான் சத்யம் தியேட்டர் நிர்வாகத்தைக் கூறுகிறார் என எண்ணுகிறேன். கலைப்புலி தாணு கூறுவது போன்று அவருக்கு நல்லவர்களால் எப்படியோ! ஆனால் மற்றவர்களுக்கு? அந்த மரியாதை சத்யம் சினிமாஸ் மூலம் பிற தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே கட்டுரையாளர் கூற விரும்பும் விளக்கம்.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

சனி 21 ஏப் 2018