மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஏப் 2018

சிரிப்பினில் வரைந்த பத்ம வியூகம்!

சிரிப்பினில் வரைந்த பத்ம வியூகம்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 51

இராமானுஜம்

தமிழ் சினிமா வழக்கமான சகஜ நிலைக்குத் திரும்பி இருக்கிறது. இவன் எல்லாம் எங்கே தேற போகிறான் என்று நக்கல் நையாண்டி செய்தவர்கள், எதுவும் சொல்ல முடியாதபடி பொதுத் தேர்வில் 80% மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவனை போன்று வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

அடுத்த கட்டமாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று சொந்த மாநிலத்தில் சீட் வாங்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் மொழி தெரியாத அண்டை மாநிலம் செல்ல வேண்டும். இது போன்ற நிலையில் தான் தயாரிப்பாளர்கள் சங்க வெற்றி இருக்கிறது.

அரசு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்த திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. அரசு என்ன சட்டம் போட்டாலும் அதை அமுல்படுத்த வேண்டிய எந்திரம் தாமதப்படுத்தலாம். முனை மழுங்கச் செய்யலாம். இது போன்ற குழலை தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்கொள்ளப் போகிறது.

தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர குறிப்பிட்ட சிலர் முயற்சித்தனர். அதற்காக டிஜிட்டல் நிறுவனங்களை தயாரிப்பாளர்களுக்கு எதிராக, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினார்கள். இதற்கு சாதகமாக திருப்பூர் சுப்பிரமணி பேசி வந்தார். இதனைக் காரணம் காட்டி அவரை தயாரிப்பாளர்கள் - திரையரங்க உரிமையாளர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை விதித்திருந்தது. இந்த சூழ்நிலை உருவாகக் காரணம் சிண்டிகேட் பஞ்ச பாண்டவர்கள். வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிற போது கொங்கு மண்டலத்தில் சுப்பிரமணி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டிருந்தது.

திருப்பூர் சுப்பிரமணி பங்கேற்காமல் பேச்சுவார்த்தை சுமுகமான முடிவுக்கு வராது என இத்தொடரின் இடையில் குறிப்பிட்டிருந்தோம். அரசு முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமான முடிவு எட்டப்பட பிரதான காரணம் சுப்பிரமணி என்கிறது அரசு வட்டாரங்கள்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளராக பன்னீர்செல்வம் இருந்தாலும் பிரச்சினைகளை பேசக்கூடிய ஆற்றல் இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியே பேச்சுவார்த்தையில் முன்னிலைப்படுத்தப்பட்டார் . தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் நலனை முன்னிறுத்திய சுப்பிரமணி டிஜிட்டல் நிறுவனங்களை பலி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சிண்டிகேட் சீனிவாசன்கள் தங்கள் மறுமுகத்தை தலைமை செயலகத்தில் காட்டியிருக்கிறார்கள். இதனால் கொங்கு மண்டலத்தின் தியேட்டர் கூட்டணியில் குழப்பம் வரலாம்.

டிஜிட்டல் நிறுவனமான கியூப் மற்றும் Book MyShow இந்த இரண்டு நிறுவனங்கள் தான் தியேட்டர் சிண்டிகேட் அமைப்புகளின் முன்தொகை ஊற்றுகள், வங்கியாளர்கள். டிஜிட்டல் நிறுவனங்கள் வருவாய் 40% குறைக்கப்பட்டுவிட்டது. எனவே, Book MyShow முற்றிலும் நீக்கப்படக் கூடிய அபாயம் உள்ளது. தியேட்டர் சிண்டிகேட் பலம்பெறும் வாய்ப்பு இனி குறையத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கம் பிரதானமாகக் கூறி வந்த கோரிக்கை, தனிநபர் ஆதிக்கத்திலிருந்து திரையரங்குகளை வெளிக்கொண்டு வருவது. சாதாரண காரியமல்ல. அரசு சட்டம் போட்டு அமுல்படுத்தக்கூடிய காரியமும் இல்லை. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தாத வகையில் சிண்டிகேட் அமைப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆயுதத்தை போகிற போக்கில் தயாரிப்பாளர்கள் சங்கம் தன் வசப்படுத்தியிருக்கிறது. பிற எல்லா பிரச்சினைகளிலும் கவனம் செலுத்திய சிண்டிகேட், இது என்ன சாதாரண விஷயம் தானே என்று அலட்சியப்படுத்தியது அவர்களது அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் என்பது புரியவில்லை. அது தெரிந்ததால் தான் திருப்பூர் சுப்பிரமணி இரு தரப்புக்கும் சாதகமாக பேசி அனைவரது அபிமானத்தையும் பெற்றார். ஊர் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆக முடியாது" என்பதற்கு சிண்டிகேட் சீனிவாசன்கள் மிக சிறந்த உதாரணம். அப்படி என்ன ஆயுதம்?

"மாஸ்டரிங் "

தமிழ் சினிமா வியாபாரம், வசூல், இவற்றை தீர்மானிக்கும் காரணியாக மாஸ்டரிங் இருக்கப் போகிறது எப்படி? நாளை காலை 7 மணி பதிப்பில்..

குறிப்பு : சத்யம் தியேட்டருக்கு நற்சான்றிதழ் வழங்கிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு - அதற்கு கட்டுரையாளரின் பதில் நாளை இடம் பெறுகிறது.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 20 ஏப் 2018