மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

மெக்கா மசூதி வழக்கு நீதிபதி ராஜினாமா ஏன்? - 4

மெக்கா மசூதி வழக்கு  நீதிபதி ராஜினாமா ஏன்? - 4

மெக்கா மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்தர் ரெட்டி மறுநாளே தனது பதவியை ராஜினாமா செய்தார் . இதன் பின்னணியில் அதிர்ச்சிகரமான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பிரிண்ட் என்ற இணைய தள இதழில் வெளியான செய்தியில் கூறியுள்ளதாவது:

தீர்ப்பு அளித்தவுடன் ராஜினாமா செய்ததற்கு சொந்தக் காரணங்கள் என்று கூறினாலும் தீர்ப்புதான் முதல் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரிண்ட் நிருபர் சேகரித்த தகவல்களின்படி அவர் மீது ஏராளமான லஞ்ச ஊழல் புகார்கள் உள்ளன, அதுதான் அவர் ராஜினாமா செய்ததற்குக் காரணம் எனத் தெரிகிறது.

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தின் லஞ்ச ஒழிப்புத்துறையானது நீதிபதியின் லஞ்ச ஊழல் புகார்களை விசாரித்து வருவதாக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தின் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையின் பதிவாளரைத் தொடர்புகொண்டார் நிருபர். ஆனால் முடியவில்லை. அவரிடமிருந்து தகவல்கள் பெற்றவுடன் புதிய அறிக்கை வெளியிடப்படும்.

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் முன்பாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண ரெட்டி என்பவர் நீதிபதி ரெட்டியின் ஊழலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் 11ஆம் தேதியன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவின் நகல் ஒன்றையும் பிரிண்ட் இதழ் ஆதாரமாக வைத்துள்ளது.

ஒரு வழக்கில் 3 முறை முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள ஒருவருக்கு நீதிபதி ரெட்டி முன்ஜாமீன் வழங்கியுள்ளார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி விடுமுறையில் சென்றிருந்தார். அரசு சிறப்பு வழக்கறிஞரும் வேறு பணியில் ஈடுபட்டிருந்தபோது தற்காலிக பொறுப்பு நீதிபதியாக இருந்தவர் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளார் என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிபிஐயும் நீதிபதியின் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது என்று சிபிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon