மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 28 ஜன 2020

அதிக சம்பளம் வழங்கும் இந்திய நகரம்!

அதிக சம்பளம் வழங்கும் இந்திய நகரம்!

ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்கும் நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது. பெங்களூருவில் சராசரி சி.டி.சி. (ஒரு ஊழியருக்கு ஒரு ஆண்டில் வழங்கப்படும் மொத்த பலன்களின் மதிப்பு) ஆண்டுக்கு 10.8 லட்சம் ரூபாயாக இருப்பதாக ரேண்ட்ஸ்டட் இன்சைட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரேண்ட்ஸ்டட் நிறுவனத்தின் அறிக்கையின் படி, பெங்களூருவுக்கு அடுத்த இடத்தில் புனே நகரம் உள்ளது. புனேவில் சராசரி சி.டி.சி. 10.3 லட்சம் ரூபாயாக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில், 9.9 லட்சம் ரூபாய் சராசரி சி.டி.சி.யுடன் டெல்லியும், 9.2 லட்சம் ரூபாய் சராசரி சி.டி.சி.யுடன் மும்பையும் உள்ளன. சென்னையின் சராசரி சி.டி.சி. 8 லட்சம் ரூபாயாகவும், ஹைதராபாத்தின் சராசரி சி.டி.சி. 7.9 லட்சம் ரூபாயாகவும், கொல்கத்தாவின் சராசரி சி.டி.சி. 7.2 லட்சம் ரூபாயாகவும் இருப்பதாக ரேண்ட்ஸ்டட் இந்தியாவின் அறிக்கை கூறுகிறது.

மற்ற துறைகளை விட மருந்துகள் மற்றும் சுகாதாரத் துறை அதிக ஊதியம் வழங்குவதாக இந்த அறிக்கை கூறுகிறது. மருந்துகள் மற்றும் சுகாதாரத் துறையில் சராசரியாக ஆண்டுக்கு 9.6 லட்சம் ரூபாய் சி.டி.சி.யாக வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் 9.4 லட்சம் ரூபாய் வருடாந்தர சராசரி சி.டி.சி.யுடன் தொழில் சார்ந்த சேவைகளும், 9.2 லட்சம் ரூபாய் சி.டி.சி.யுடன் வேகமாக நகரும் நுகர்பொருள் துறையும் உள்ளன. நான்காவது இடத்தில் 9.1 லட்சம் ரூபாய் சி.டி.சி.யுடன் ஐடி துறையும், ஐந்தாவது இடத்தில் 9.1 லட்சம் ரூபாய் சி.டி.சி.யுடன் ரியல் எஸ்டேட் மட்டும் கட்டுமானத் துறையும் உள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon