மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 12 நவ 2019

சம பலம்: யாருக்கு வாய்ப்பு?

சம பலம்: யாருக்கு வாய்ப்பு?

ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஜெய்ப்பூரில் இரவு எட்டு மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

கொல்கத்தா அணி நான்கு போட்டிகளில் பங்குபெற்று இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே புள்ளிகள் அட்டவணையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

ராஜஸ்தானைப் பொறுத்தவரை பேட்டிங், பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் வலிமையாக உள்ளது. கேப்டன் ரஹானே, சஞ்சு சாம்சன் இருவரும் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை உணகட், பென் ஸ்டோக் இருவரும் எதிர் அணியினருக்குச் சவாலாக உள்ளனர்.

கொல்கத்தா அணியில் நரேன், ரானா, உத்தப்பா மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்துவருகின்றனர். ரஸ்ஸல் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார். நரேன், குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்துள்ளது. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon