மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

திருப்பூர்: மலிவு விலையில் தக்காளி!

திருப்பூர்: மலிவு விலையில் தக்காளி!

திருப்பூரில் அதிக வரத்து காரணமாகத் தக்காளி விலை குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் சந்தைக்கு அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பல்லடம், பொங்கலூர், தாராபுரம், காங்கேயம் ஆகிய இடங்களிலிருந்து தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில தினங்களாகத் தினசரி 20 டன் தக்காளி விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதனால் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.10க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ ரூ.12க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி கிருஷ்ணகிரி, தாளவாடி ஆகிய இடங்களிலிருந்து சுமார் 10 டன் வெளியூர் தக்காளி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதால் 15 கிலோ தக்காளியின் விலை ரூ.100 ஆகவும், ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.6.50 ஆகக் குறைந்தது. இதனால் சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ஒன்றுக்கு ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைந்திருந்ததால் விற்பனை நன்றாக இருந்தது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon