மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

தாத்தாவைக் காத்த பீப் சாங்: அப்டேட் குமாரு

தாத்தாவைக் காத்த பீப் சாங்: அப்டேட் குமாரு

ஃபோன் போட்டு இன்னா தல இப்டி ஆயிடிச்சு என்றார் தம்பி ஒருவர். என்ன தம்பி பண்றது, ஜாலியா போராட்டம் பண்ணிக்கிட்டு ஸ்டேட் & செண்ட்ரல் கவர்ன்மெண்டுக்கு குடைச்சல் குடுத்துட்டு இருந்தோம். இப்ப என்னடான்னா போலி டாக்டருங்க பேசுறதுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியது இருக்கு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடுன மக்கள் எங்க இருக்காங்கன்னு கூட தெரியல. அந்தளவுக்கு டேக் டைவர்ஷன் போட்டு தூரமா கொண்டாந்து நிறுத்திட்டாங்க. நாம என்ன பேசணும்ங்குறதை அரசாங்கம் முடிவு பண்ற வரைக்கும், நாமளா நினைச்சு சி.எம்.-ஐ கூட மாத்தமுடியாது. நீங்க அப்டேட்டை படிங்க, நான் தம்பியோட தமிழன் லேப் வரைக்கும் போய்ட்டு வர்றேன்.

Raghavendra Aara

மலத்தை மிதிக்காமல் ஓரமாகச் செல்வதே நல்லது... அது காரைக்குடியானாலும், கலிபோர்னியாவானாலும்!

மனோ பிருந்தா

எவன் எது பன்னனும்னாலும் பேசனும்னாலும் பெண்கள தான் நடுவுல இழுத்து விட்டுடுறாங்க

இடுப்புகிள்ளிதிமுக / கன்னம் கிள்ளி கவர்னர் / Illegal Child

மொத்ததுல பெண்கள் பெண்களாய் வாழ முடியாத சூழல்

Vinoth Palanichamy

மனைவி: ஏங்க முள்ளங்கிய வெட்ட சொன்னா கேரட்ட வெட்டிருக்கீங்க?

கணவன்: ஏய் கைய வெட்டீடேண்டி. ரத்தம் முள்ளங்கில பட்டு அப்பிடியாயிடுச்சு.

மனைவி: அய்யய்யோ காய் வேஸ்ட்டா?

Vairam Sivakasi

அட்சய திருதியைக்கு என்ன மாமா பன்ன போறீங்க..!?

மட்டன் குழம்பு வைக்கலாம்ன்னு இருக்கேன்

Priyanka Chithambaram

ஈரோடு பஸ் ஸ்டாண்ட் ....

அண்ணா half litre பெப்ஸி குடுங்க...எவ்ளோ ஆச்சு அண்ணா ?

Shop keeper:தமிழ் நல்லா பேசற மா..

யோவ் நான் தமிழ் பொண்ணு தான் யா.

Vikkranth Uyir Nanban

இன்னைக்கு கவர்னர் வாங்குன ஏத்துகள பாத்தாலே தெரியுது மோடி ஏன் ப்ரெஸ் மீட் வைக்குறதில்லன்னு

Umamaheshvaran Panneerselvam

இந்த முறை ஆளுனரை பீப் சாங் பாடி காப்பாற்றியிருப்பவர் எச்.ராஜா

NaGa NT

அதிர்ஷ்டவசமாக கடந்த சனி அன்று நடந்த அந்த DEFEXPO'18-ற்க்கு சென்றிருந்ததால் கி.பி 2050 களில் தேசபக்தி சோம்பிக்கள் எவ்வாறு நடந்துகொள்ளும் என்கிற ஒத்திகை நிகழ்வை கண்டுகளிக்க முடிந்தது.

சோம்பிக்கள் ஹாலுக்கு வெளியில் நின்ற ஜீப்சிக்கள் மேலும், டேங்கர்கள் மேலும், இன்னபிற ராணுவ வாகனங்கள் மேலும் ஏறி விளையாடிக்கொண்டும் செல்ஃபி எடுத்துகொண்டும் சுற்றித்திரிந்தன. கீழிருந்த இதர சோம்பிக்களை கடித்து திங்காததும், 'பாரத் மாதாகி ஜே' என்று உயிர்போக கத்தாததும் மட்டும்தான் குறை.

ஜாக்‌ஷன் துரை

வண்டிய நிப்பாட்டிட்டு கடைக்கு போய்ட்டு வர்ற கேப்ல ஒரு பிகர் ஏறி உக்காந்திருக்கு...

இப்ப இறங்க சொல்லலாமா...இல்ல இறங்குற வரைக்கும் வெய்ட் பன்னலாமா..

Muthuramalingam Subramanian

2 ஆயிரம் ரூபாய் நோட்டில் உள்ள சிப்-ஐ சாட்டிலைட் மூலம் ஆக்டிவேட் செய்வதன் மூலம் ரூபாய் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்கலாமே?

Karl Max Ganapathy

கடந்த ஐந்தாண்டுகளில் காவிகள் தமிழகத்தில் சாதித்ததில் மிக முக்கியமானது, அவர்களுக்கு பதில் சொல்லும் எத்தனத்தில் நாமும் தரம் தாழ்ந்து போகும் நிலையை உருவாக்கியதே. மனித மாண்பு என்பது நாம் கைகொள்ளும் எந்த அரசியல் சாய்வையும் விட மேலானது.

அவர்கள் புரளும் சாக்கடையில் நாம் முட்டி வரைக்கும் இறங்கியிருக்கிறோம்!

கிருத்திகா

துன்பத்தில் கை கொடுத்து தூக்கி விட பிறருடைய கையை எதிர்பார்ப்பதை விட

நம்மீது உள்ள நம்பிக்கையை நம்புவோம்...

கோழியின் கிறுக்கல்!!

நண்பனிடம் ஓசியில் எதை வேண்டுமானாலும் எளிதாக வாங்கிவிடலாம்,

ஆனால் கடனாகத் தான் எதையும் வாங்க முடியாது!!!

meenakshisundaram

நிர்மலா தேவி, கவர்னர், எச்.ராஜா என செய்திகள் தடம் மாறி, காவிரி மேலாண்மை வாரியம் குறித்த செய்திகள் மறக்கடிக்கப்பட்டு வருகின்றன

Kopithɑ

"டா" போடும் பெண்கள் அனைவரும் ஆண்களையே "டீ" போட கிச்சனுக்குள் அனுப்புகின்றனர்.

இன்றைய "டா" நாளைய "டீ" இதுவே காலப்போக்கில் "டாடி" என குழந்தைகளால் அன்போடு அழைக்கப்படுகிறது.

-லாக் ஆஃப்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon