மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

திறமை நெருக்கடியில் இந்தியா: இன்ஃபோசிஸ்!

திறமை நெருக்கடியில் இந்தியா: இன்ஃபோசிஸ்!

இந்தியா திறமை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.

ஏப்ரல் 17ஆம் தேதியன்று சென்னை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜேர்னலிசம் கல்லூரியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், "இந்தியப் பெரு நிறுவனங்களின் தரநிலை என்பது உலகளாவிய பெரு நிறுவனங்களின் தரங்களுக்கு ஈடாக இல்லை; மிகவும் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் வரி அமைப்புகள், பல்வேறு ஒப்புதல்களைப் பெறுவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகவும் சிரமமானதாக உள்ளது.

இந்தியக் கல்வி அமைப்பு முறை இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாய் இல்லை. 80 முதல் 85 சதவிகித இளைஞர்கள் எந்த வேலைக்காகவும் பயிற்சி பெறவில்லை. தொழில் முனைவோர்களுக்குச் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். தொழில்நுட்பத் துறையில் வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி முறை பல்வேறு பணிகளைக் குறைத்துள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon