மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

பெண்கள் கொலை: குண்டர் சட்டம்!

பெண்கள் கொலை: குண்டர் சட்டம்!

சென்னையில் இருவேறு பெண்களின் கொலை வழக்கில் கைதான இருவரின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கே.கே. நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் முதலாமாண்டு பி.காம் பயின்று வந்தவர் அஷ்வினி. இவரை கடந்த மாதம் 9ஆம் தேதியன்று கல்லூரி வாசலில் வைத்தே அழகேசன் என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல் சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்தவர் யமுனா (33). இந்தப் பரிசோதனை மையத்தின் உரிமையாளர் ராஜா (40). இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு யமுனாவை ஆசிட் ஊற்றி கொலை செய்தார்.

இந்நிலையில் தற்போது அழகேசன் மற்றும் ராஜா இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பெண்களை துன்புறுத்துவோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon