மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

ஹெல்த் ஹேமா: நீரிழிவைக் கட்டுப்படுத்தும் உணவும் உடற்பயிற்சியும்!

ஹெல்த் ஹேமா: நீரிழிவைக் கட்டுப்படுத்தும் உணவும் உடற்பயிற்சியும்!

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்...

* கீரை வகைகள்

* வெங்காயம்

* புதினா

* வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்

* சூப் வகைகள்

* எலுமிச்சை

* நட்ஸ்

* நறுமணமூட்டிகள் (Spices).

தவிர்க்க வேண்டிய உணவுகள்...

* ஸ்வீட்ஸ்

* டிரை ஃப்ரூட்ஸ்

* குளூகோஸ்

* தேன்

* சர்க்கரை

* சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்

* கேக் வகைகள்

* பொரித்த உணவுகள்

* ஜூஸ் வகைகள்

* இனிப்பான குளிர் பானங்கள்

* மது

சரியான, முறையான உணவோடு உடற்பயிற்சி செய்வது நீரிழிவு நோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். தினமும் உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது காலை வெறும் வயிற்றிலோ உடற்பயிற்சி செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யும்போது தசைகள், கணையத்தில் சுரக்கும் இன்சுலினை நன்றாகச் செயலாற்ற அனுமதிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.

இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இதயம் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதால் மாரடைப்பு, பக்கவாதம், கால் நரம்புகள், ரத்தக் குழாய்கள் பாதித்தல், ரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்தல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

நீரிழிவு நோயுள்ளவர்கள் முறையான உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு கூடுகிறது, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. ரத்தம் உறையும் தன்மை மாறுபடுகிறது. ரத்தக் கொதிப்பு குறைகிறது.

உணவுக் கட்டுப்பாட்டுடன் முறையான உடற்பயிற்சியும் செய்யும்போது உடலிலுள்ள கொழுப்புச் சத்து எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.

முறையான உடற்பயிற்சி செய்வதால் மன பதற்றம் குறைகிறது. மனம் அமைதியடைகிறது. நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்ற உணர்வு மனதில் ஏற்படுகிறது. வாழ்க்கை நிலை உயர்கிறது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon