மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

தரமணி ஹீரோவின் அடுத்த படம்!

தரமணி ஹீரோவின் அடுத்த படம்!

தரமணி படத்தைத் தொடர்ந்து நடிகர் வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் தரமணி. ஐடி நிறுவன ஊழியர்களுக்கு இடையேயான காதல் குறித்த கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க வசந்த் ரவி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா மற்றும் புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான ஆக்க்ஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். மேலும் மற்றொரு முக்கிய கதாபத்திரத்தில் ரோகிணி நடிக்கவுள்ளார்.

ஆர்.ஏ.ஸ்டுடியோஸ் சார்பாக சி.ஆர். மனோஜ் குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார். 'ஜில் ஜங் ஜக்' மற்றும் ‘அவள்’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படத்தின் தலைப்பு, நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon