மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

நிதி மோசடியைத் தொடர்ந்து வைர மோசடி!

நிதி மோசடியைத் தொடர்ந்து வைர மோசடி!

மெஹுல் சோக்சியிடம் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 கோடி மதிப்பிலான வைரக் கற்களின் உண்மையான மதிப்பு தற்போது ரூ.10 லட்சமாக இருப்பதாக சிபிஐ கண்டறிந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்த மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடியும் அவரது மாமா மெஹுல் சோக்சியும் மோசடி கண்டறியப்பட்டவுடன் நாட்டை விட்டே தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களுக்கு எதிரான மோசடிப் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நீரவ் மோடி போலியான நகைகளையும், போலியான வைரக் கற்களையும் விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் நகை வாங்குவதற்கே பெரிதும் தயங்குகின்றனர். நீரவ் மோடி தற்போது ஹாங்காங்கில் தங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மெஹுல் சோக்சியிடம் கைப்பற்றப்பட்ட வைரத்தில் மோசடி நடந்திருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிபிஐ அமைப்பிடமிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நாங்கள் மெஹுல் சோக்சியின் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டபோது கைப்பற்றிய வைரங்களின் மதிப்பு ரூ.1.06 கோடி எனக் கூறி அதற்கான ஆவணங்களையும் கணக்கில் காட்டினர். அந்த வைரங்களைப் பின்னர் நாங்கள் பரிசோதனைக்கு அனுப்பினோம். அதற்கான பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைத்துள்ளது. அந்த வைரங்களின் உண்மையான மதிப்பு ரூ.10 லட்சம் மட்டுமே. இது முன்பு கூறிய மதிப்பில் பத்தில் ஒரு பங்குதான்’ என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon