மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

பாலியல் வன்கொடுமை: தண்டிக்கப்பட்டது குறைவு!

பாலியல் வன்கொடுமை: தண்டிக்கப்பட்டது குறைவு!

பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் பாலியல் பலாத்காரம் தொடர்பான விசாரணையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 25 கேள்விகளை எழுப்பி, டிஜிபியும் மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி மகேஷ்வரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளதாகவும், பாலியல் குற்றங்கள் பெருக முக்கிய காரணம், பாலியல் கல்வி இல்லாததும் பெற்றோர் கவனிப்பு இல்லாததும்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தேசிய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருக்கும்போது, தமிழகத்தில் குறைவாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததை அடுத்து, இந்தக் குற்றங்கள் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிபதி, மத்திய அரசு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், பாதிக்கப்படும் பெண்களுக்கு யாராலும் உதவ முடியாது எனக் கூறி, விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon