மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

வைகோவை நோக்கி மதுபாட்டில் வீச்சு!

வைகோவை நோக்கி மதுபாட்டில் வீச்சு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாகனப் பிரசாரம் மேற்கொண்ட வைகோவை நோக்கி மது பாட்டில் வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கொரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாகன பரப்புரை மேற்கொண்டுள்ளார். நேற்று(ஏப்ரல் 17) மாலை கோவில்பட்டியில் இருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய வைகோ எட்டயபுரம், புதூர், நாகலாபுரம் விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், குளத்தூர் பகுதியில் தனது வாகனத்தில் இருந்தபடி வைகோ பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி மதுபாட்டில் வீசப்பட்டது. எனினும், அருகில் இருந்த தொண்டர்படை வாகனத்தில் பட்டு பாட்டில் கீழே விழுந்தது. இதையடுத்து பாட்டில் வீசப்பட்ட மாடிக்குச் சென்ற மதிமுகவினர் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தனது தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி வைகோ வேண்டுகோள் விடுத்தார். மதிமுகவினரை சமாதானம் செய்த போலீசார், மதுபாட்டில் வீசியவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

முன்னதாக, வைகோ கோவில்பட்டியில் வாகன பரப்புரையை தொடங்குவதற்கு முன்பாக சிவந்திநாராயணன் தலைமையிலான பாஜகவினர் வைகோவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்பு கொடி போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon