மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

காமுகி: கேரளாவுக்கு இன்னொரு காலேஜ் டிரிப்!

காமுகி: கேரளாவுக்கு இன்னொரு காலேஜ் டிரிப்!

மலையாளத் திரையுலகத்தின் பக்கம் தமிழ் ரசிகர்களை பெருமளவில் டேக் டைவர்ஷன் எடுக்கவைத்த திரைப்படம் பிரேமம். அந்தப் படத்துக்காக யாரும் புரமோஷன் செய்யவில்லை. யாரும் படம் பாருங்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. ஈகா தியேட்டரில் மட்டும் அந்தத் திரைப்படம் ஓடியது. வாய் வழியாகப் பரவி ஒரு வருடத்துக்கும் மேலாக தமிழகத்தில் அந்தத் திரைப்படம் ஓடியது தான் மலையாளத்துக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்குமான வரலாற்றுச் சாதனை. இதோ, அதேவகையில் இன்னொரு திரைப்படம் உருவாகிறது.

காமுகி என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் முக்கிய நோக்கம் காதலை மட்டுமே மையப்படுத்தாமல், முழுக்க முழுக்க கேளிக்கைக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்பது தான். கிட்டத்தட்ட பிரேமம் திரைப்படத்தில் காணாமல் போயிருந்த கல்லூரிக்கால மகிழ்ச்சிகள், சக மாணவ நண்பர்களின் சேட்டைகள் ஆகியவற்றை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பேசுவதாக இப்படத்தின் டிரெய்லர் அமைந்திருக்கிறது.

காமுகி டிரெய்லர்

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon