மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள் 3!

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள் 3!

மெக்கா மசூதி வழக்கின் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது தேசிய புலனாய்வு அமைப்பின் தோல்வியை காட்டுகிறது என்று பைசி அலீம் என்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்மிட் காம் என்ற இணைய இதழில் பைசி அலீம் கூறியுள்ளதாவது

உலகளவில் எந்த வெடிகுண்டு சம்பவத்திலும் முஸ்லீம்களை நோக்கி குற்றம் சாட்டுவது வாடிக்கையாகி விட்டது. இதே போன்று மாலேகன் வெடிகுண்டு சம்பவத்திலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களிடம் எந்த மாதிரியான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். மெக்கா மசூதி வழக்கிலும் எந்த வித ஆதாரங்களுமின்றி நுாற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டனர்.

மெக்கா மசூதி வழக்கின் விசாரணையானது முழுமையாக ஆதாரங்களையும் சாட்சிகளையும் சார்ந்திருந்தது. ஆனால் தேசிய புலனாய்வு அமைப்பு எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை. ஒரு தேசிய அளவிலான புலனாய்வு அமைப்பு ஏன் எந்த ஆதாரங்களையும் தரவில்லை என்பது ஊகிக்க முடியாததா? இந்த அமைப்பு அதிகாரத்திலுள்ளவர்களின் உத்தரவுகளின்படி செயல்படுகிறதா?

சில ஆண்டுகளுக்கு முன்னதாக மாலேகன் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்படி அரசு சிறப்புவழக்கறிஞரிடம் கூறப்பட்டிருந்தது. இது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. குற்றவாளிகளை பாதுகாக்கும் பணியையும் இவ்வமைப்பு மேற்கொள்வதாக புகார்கள் கூறப்படுகின்றன.

ஒரு தேசிய புலனாய்வு அமைப்பில் செல்வாக்கு செலுத்தி தங்களை காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் முஸ்லீம்கள் பலமுடையவர்களாக இல்லை. ஆனால் இந்துக்களை கைது செய்தால் அதற்கு அதே அமைப்பினால் முழுமையான விசாரணை நடைபெறுகிறது

மும்பை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியதற்கும் அசீமானாந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. மும்பை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர் சுவாமி அசீமானாந்தாவோ தனது ஒப்புதல் வாக்குமூலத்தை திரும்ப பெற்றுக் கொண்டார்.

இது போன்ற வழக்குகளின் முடிவுகளிலிருந்து ஒரு கருத்தியல் உருவாகி வருகிறது. ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்க முடியாது இந்து பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்க முடியாது. இன்று இவ்வாறு நடப்பதற்கு பின்னணியில் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது.

இதில் ஒரு முக்கிய கேள்வி முஸ்லீம்ளும் இல்லை இந்துக்களும் இல்லை என்றால் யார்தான் மெக்கா மசூதியில் குண்டு வைத்தது? நாடு இந்த கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கிறது.

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள் 2

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சில கேள்விகள்

தொடர்ச்சி இரவு 7 மணி பதிப்பில்

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon