மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 ஜூலை 2020

நஷ்டத்தை விதைத்த பருப்பு விவசாயிகள்!

நஷ்டத்தை விதைத்த பருப்பு விவசாயிகள்!

சன்னா வகைப் பருப்பு இந்த ஆண்டில் அதிகமாக உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் அரசின் உதவி போதாமல் பருப்பு விவசாயிகளுக்கு ரூ.6,170 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் பருப்பு விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

நடப்புப் பருவத்தில் மொத்தம் 1,110 லட்சம் குவிண்டால் அளவிலான சன்னா பருப்பு உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சன்னா பருப்புக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,400 ஆகும். அதிக உற்பத்தி இருக்கும் நிலையில் அரசு தரப்பிலிருந்து குறைந்த அளவிலான பருப்பை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பருப்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.6,170 கோடி இழப்பு ஏற்படும் எனவும், விவசாயிகள் உரிமைக்காக யோகேந்திர யாதவால் தொடங்கப்பட்ட ஜெய் கிஸான் அந்தோலன் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு தரப்பிலிருந்து மொத்தம் 424.4 லட்சம் குவிண்டால் அளவிலான பருப்பை மட்டுமே கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மீதமுள்ள 685.6 லட்சம் குவிண்டால் அளவிலான சன்னா பருப்பைக் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவான விலைக்குச் சந்தைகளில் தாங்களே விற்றாகவேண்டும். சந்தையில் சன்னா பருப்பின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,300 முதல் ரூ.3,500 வரையில் இருக்கும் நிலையில் பருப்பு விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.900 முதல் ரூ.1,100 வரையில் நஷ்டம் ஏற்படும் என்று ஜெய் கிஸான் அந்தோலன் அமைப்பு கணக்கிட்டுக் கூறுகிறது. எனில், இவ்விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.6,710 கோடி வரையிலான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சன்னா பருப்பைப் போலவே துவரம் பருப்பைப் பயிரிடும் விவசாயிகளுக்கு ரூ.1,125 கோடி வரையிலான இழப்பு ஏற்படும் என்று ஜெய் கிஸான் அந்தோலன் எச்சரித்துள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon