மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

நீட்: ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட்: ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ்) ஆகிய படிப்புகளுக்கும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2018-19ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என பிப்ரவரி 8ஆம் தேதியன்று சிபிஎஸ்இ அறிவித்தது. நீட் தேவுக்கு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய 10 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 150 நகரங்களில் 2,000க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு சுமார் 15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை சிபிஎஸ்இ நேற்று (ஏப்ரல் 17) வெளியிட்டுள்ளது. மாணவர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அளித்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon