மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

நெடுந்தூரச் சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்!

நெடுந்தூரச் சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள்!

கோடைக்கால விடுமுறை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியர்கள் நீண்ட தூர சர்வதேச சுற்றுலாப் பயணங்களுக்கு திட்டமிடுவதாகவும், இதற்கான முன்பதிவுகள் முந்தைய ஆண்டை விட 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் ‘மேக் மை ட்ரிப்’ நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முன்பதிவுகளில் 50 சதவிகிதப் பேர் 25 முதல் 35 வயது வரம்புக்குள் இருப்பவர்களாக உள்ளதாகப் பிரபல ஆன்லைன் நிறுவனமான மேக் மை ட்ரிப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி மோகித் குப்தா, ஃபர்ஸ்ட் போஸ்ட் ஊடகத்திடம் பேசுகையில், “இந்த ஆண்டில் குறைந்த தூரத்திலான பயணங்களை விட நீண்ட தூரத்திலான பயணங்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட 25 சதவிகித உயர்வாகும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் கோடைக்கால சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையும் 24 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மோகித் குப்தா தெரிவித்துள்ளார்.

லண்டன், பாரிஸ் ஆகிய நெடுந்தூரப் பயண இலக்குகள் அதிகளவில் விரும்பப்படுகின்றன. ரோம், டொரோண்டோ, ஆம்ஸ்டர்டாம், இஸ்தான்புல் போன்ற இலக்குகள் வளர்ந்து வரும் சர்வதேசப் பயண இலக்குகளாகவும் உள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறுகிய தூரத்திலான பயணங்களுக்கு துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற இலக்குகள் பெரிதும் விரும்பப்படுகின்றன. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் ஸ்மார்ட்போன்களின் மூலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள பயணங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விடக் கணிசமாக அதிகரித்திருப்பதாக மோகித் குப்தா கூறுகிறார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon