மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

திருமண லாரி விபத்து : 22பேர் பலி!

திருமண லாரி விபத்து : 22பேர் பலி!

மத்திய பிரேதசத்தில் இன்று திருமணத்துக்கு சென்று திரும்பிய மினி லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில், திருமணத்துக்குச் சென்றுவிட்டு மினி லாரி ஒன்றில் சுமார் 45க்கும் மேற்பட்டோர் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள சோனே என்ற ஆற்றுப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் வந்த சுமார் 22 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதியில் காவல் துறையினரும், மீட்பு படையினரும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்தி மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங், அவர்களது குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இன்னொரு சம்பவத்தில் ,தமிழகத்தில் மன்னார்குடி அருகே தனியார் பேருந்து இன்று விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon