மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

சட்டமன்றத் தேர்தல் தோல்வியை எதிர்த்து விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விசிக தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் முருகுமாறன் நிறுத்தப்பட்டார். தேர்தல் முடிவில் 83 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘அரசு அதிகாரிகள் துணையுடன் முறைகேடாக அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய கோரி அதிமுக வேட்பாளர் முருகுமாறன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரணை செய்த நீதிபதி துரைசாமி, முருகுமாறன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon