மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஏப் 2018

மேலும் ஆறு மாநிலங்களில் இ-வே பில்!

மேலும் ஆறு மாநிலங்களில் இ-வே பில்!

மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகங்களுக்கு மின்வழி ரசீதைக் கட்டாயமாக்கும் திட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஒரே அடியாக எல்லா மாநிலங்களுக்கும் அமல்படுத்தாமல் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆறு மாநிலங்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மின்வழி ரசீது அமல்படுத்தப்படுவதாக ஜிஎஸ்டி குழுவின் தலைவர் சுஷில் மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஏப்ரல் 17ஆம் தேதி அவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் கூறுகையில், "ஏப்ரல் 20ஆம் தேதி முதல் பீகார், ஜார்கண்ட், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களுக்கு மின்வழி ரசீதுத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ’ரிவர்ஸ் சேஞ் மெக்கானிசம்’ குறித்து ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. இப்போது நாட்டின் 9 மாநிலங்களின் இ-வே பில்லின் பங்கு 82 சதவிகிதமாக உள்ளது. நாட்டிலேயே அதிகமாக இ-வே பில் வழங்கப்படும் மாநிலமாக குஜராத் (19.39%) உள்ளது. இரண்டாவது இடத்தில் கர்நாடகமும் (15.32%), மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் (12.43%) உள்ளன. பஞ்சாப், டெல்லி, ஹரியானா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன" என்றார்.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

புதன் 18 ஏப் 2018