மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

மெர்சலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

மெர்சலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் சர்வதேச ஃபென்டாஸ்டிக் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

தெறி படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான படம் ‘மெர்சல்’. இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இதில் விஜய் அப்பா, மகன்கள் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கே.வி.விஜயேந்திர பிரசாத் மற்றும் ரமண கிரிவாசன் திரைக்கதை எழுதியிருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் 22ஆவது சர்வதேச ஃபென்டாஸ்டிக் திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது. இதை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விழா வருகிற ஜூலை 12ஆம் தேதி துவங்கி ஜூலை 22ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமி விழாவில் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை மெர்சல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon