மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

விரைவில் திரையில் தோன்றும் ஜான்வி

விரைவில் திரையில் தோன்றும் ஜான்வி

ஸ்ரீதேவின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகும் தடக் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஆணவக் கொலையை மையப்படுத்தி மராத்தியில் எடுக்கப்பட்ட படம் சாயரட். இந்தப் படம் இந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. விமர்சன ரீதியாக மட்டுமல்லாது வசூல் ரீதியாகவும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த முதல் மராத்தி படம் என்ற சாதனையைப் படைத்தது.

இந்தப் படத்தை ரீமேக் செய்வதற்கு பல்வேறு மொழிகளில் அதன் உரிமை விற்கப்பட்டுள்ள நிலையில், இந்தியில் அதனை தடக் என்ற பெயரில் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் ஜீ ஸ்டுடியோ நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி நடிகையாக அறிமுகமாகவுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் ஹாட்டார் நாயகனாக நடிக்கிறார். சாஷாங் ஹைதான் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் துவங்கியது.

இந்த நிலையில் ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24ஆம் தேதி துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். இதனால் சில நாட்கள் படபிடிப்பில் ஜான்வி கபூர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து மீண்டும் துவங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் இறுதிகட்ட பணிகள் துவங்கிவிட்டதாகவும், படம் வருகிற ஜூலை 20ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon